"தென்கொரியாவில் ஒரு இலங்கை ஹீரோ!" - அந்நாட்டு ஊடகங்கள் புகழாரம்

#SriLanka #people #world_news #Country #SouthKorea #ImportantNews #Media #L4
Lakhi
3 hours ago
"தென்கொரியாவில் ஒரு இலங்கை ஹீரோ!" - அந்நாட்டு ஊடகங்கள் புகழாரம்

தென்கொரியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'F-4 பாண்டம்' போர் வானூர்தி ஒன்று இயந்திர கோளாறு காரணமாகக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது பாராசூட் மூலம் குதித்த இரு விமானிகளைக் கடலில் இருந்து பாதுகாப்பாக மீட்ட ருவான் (Ruwan) என்ற இலங்கைப் பணியாளருக்கு, தற்போது அந்நாட்டு அரசாங்கம் சட்டப்பூர்வ வதிவிட உரிமையை வழங்கியுள்ளது. விபத்து நடந்த சமயம் அருகில் உள்ள கடற்பாசி பண்ணையில் பணிபுரிந்து கொண்டிருந்த ருவான், தனது சக பணியாளர்களுடன் படகில் சென்று விமானிகளைப் பாதுகாத்திருந்தார்.

இந்த வீரச்செயலுக்காகப் பாராட்டுக்களைப் பெற்ற போதிலும், அவரது விசா காலம் முடிவடைந்ததால் அவர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்தார். இதனை அறிந்த தென்கொரிய வானூர்திப்படைத் தலைமையகம், அவரை "நாட்டிற்குப் பங்களிப்பு செய்தவர்" என அடையாளம் காட்டி, அவருக்கு வதிவிட உரிமை வழங்குமாறு நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தது. இதனையேற்று, கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி அவருக்குப் புதிய வேலை விசா வழங்கப்பட்டதுடன், சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காக விதிக்கப்பட வேண்டிய அபராதங்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக the korea herald செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!